Unlocking the values – Mamunikal – 5

[sc:t]சரமஶ்லோகம்[sc:/t]

 

[sc:b]

நம் ஆசார்யர்கள் , ரஹஸ்யார்த்தங்களை எங்கெல்லாம் எடுத்துச் சொல்ல முடியுமோ, அங்கு நிச்சயமாகக் கோடிட்டுக் காட்டுவார்கள்.

ஸ்வாமி நம்பிள்ளை நாலாம் பத்து, ஈடு பிரவேஶத்தில், முதல் முன்று பத்து, த்வயார்த்தத்தின் உத்தர வாக்கியத்தையும், அடுத்த மூன்று பத்து, பூர்வ வாக்கியத்தையும் அநுஸந்திப்பதாகக் காட்டுவர்.

ஈட்டுப் பெருக்கரான நம் பெரிய ஜீயர் இதோ , சரமஶ்லோகத்தை இப்படி நமக்கு எடுத்துக் கொடுக்கிறார் முமுஷுப்படித்வயார்த்தம் 116 சூத்திரத்தில்

[sc:q]புறம்புண்டான பற்றுக்களையடைய வாஸனையோடே விடுகையும்,[sc:/q]

[sc:q]எம்பெருமானையே தஞ்சமென்று பற்றுகையும் …[sc:/q]

இதற்கு வியாக்கியானம் அருளுகையில், மாமுனிகள், இவ்விரு வாக்கியதிற்கும் பொருள் உரைப்பதோடு நின்றிருக்கலாம்.

அதற்கு ஒரு படி மேல் செல்கிறார்.

அதைச் சற்று நோக்குவோம்.

இவ்விரண்டு வாக்கியத்தாலும், சரமஶ்லோகத்தின் பூர்வார்த்தத்ததை சொல்லுகிறதாகவுமாம்.

Sri MamunikaL while giving out the commentary for the above two lines from Mumushuppadi, could have just stopped after explaining the meaning. However, he goes on to correlate these sentences with the first sentence of charama slokam and gives us in a platter . Here it is..

எங்ஙனே என்னில்,

[sc:q]புறம்புண்டான பற்றுக்களையடைய ====ஸர்வதர்மான் என்கிற பதத்தின் அர்த்தத்தையும்[sc:/q]

[sc:q]வாசனையோடு விடுகையும்==பரித்யஜ்ய என்ற பதத்தின் அர்த்தத்தையும் [sc:/q]

[sc:q]எம்பெருமானை====மாம் என்ற பதத்தின் அர்த்தத்தையும்[sc:/q]

[sc:q]ஏ====என்ற ஏகாரத்தால் ஏக பதத்தின் அர்த்தத்தையும்[sc:q]

[sc:q]தஞ்சம் =என்கையாலே ஶரண பதத்தின் அர்த்தத்தையும்[sc:/q]

[sc:q]பற்றுகை =என்று வ்ரஜ பதத்தின் அர்த்தத்தையும் அடைவே சொல்லுகையாலே.[sc:/q]

மாமுனிகள் வ்யாக்கியானம் இடுவதின் காம்பீர்யம் இதிலிருந்து கை இலங்கு நெல்லிக் கனி. முதற்கண் , சரம ஶ்லோகத்தின் அர்த்தம் இவை என்று கோடிட்டு காட்டியதும், பின் அதனை விளக்கியும், [sc:q]”அடைவே சொல்லுகையாலே“[sc:/q] என்று இதன் கருத்தை அறுதி இட்டதும், என் என்று சொல்லுவது?!

[sc:/b]


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *