Srirangam kaveri pushkarsm purappadu 11.9.17

Thanks to Sri Vijayaragavan krishnan

நாளை ஸ்ரீரங்கத்தில் அம்மாமண்டபம் சாலையில் அமைந்துள்ள பெரிய யாகசாலை மற்றும் சொற்பொழிவு மண்டபங்கள் அமையபெற்ற இடத்தில் .. காவேரி தாயாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக யாகங்கள் நடைபெற உள்ளன .

அதை தெரிவிக்கும் விதமாக ஸ்ரீரங்கநாராயண ஜீயர் சுவாமிகள் மற்றும் கோவில் பெரியோர்கள் பட்டர்கள் முன்னிலையில்  ஒரு வீதி உலாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர் ..

அதில் பெயர் குறிப்பிட படாத கோவிலுக்காக செய்யப்பட்ட பெருமாள் தாயார் திருமேனிகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு யாக பே’ரர் ஆகா அங்கே எழுந்தருளப்பட்டனர்.

கோபுரப்பட்டியை சேர்ந்த குழந்தைகளின் கோலாட்டம் அழகுற இருந்தது .. மற்றும் ஸ்ரீரங்கம் விஷ்ணு சகஸ்ரநாம கோஷ்டியினரின் பாராயணம் தொடர்ந்தது …

கிட்டத்தட்ட ஒரு நான்கு ஐந்து மாதங்களுக்கு பிறகு எனது ஆசான் கிருஷ்ணமாசாரியார் சுவாமிகளை சந்தித்தேன் .. 

என்னால் ஸ்ரீரங்கம் கோவிலின் உள்ளே நாலு இடங்களை பற்றிய செய்தி சொல்ல முடியும் .. அவரால் நாலு அடிக்கு ஒரு விசயத்தை  அதை உருவாக்கிய அரசன் மற்றும் காலம் பற்றி சொல்ல முடியும் .. 

இதன் காணொளி இரவு 11 மணிக்கு பதிவேற்றப்படும் 

விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *