NamperumaL vedupari irapathu 8, 5.1.28

Thanks to Sri Raghavan Nemili

வேடுபறி உற்சவம் , ஸ்ரீ.நம்பெருமாள் இராப்பத்து , எட்டாம் நாள் ( 05.01.2018 ).

இராப்பத்து ஏழாம் நாள் உற்சவத்தின் போது, ஸ்ரீ.நம்பெருமாளின் கைத்தல ஸேவை எவ்வளவு அற்புதமாக இருந்ததோ , அது போல் மற்றொரு அற்புதம் இன்றைய ஸேவை.

இன்று ஸ்ரீ.நம்பெருமாளுடன் வேடுபறி காணும் ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த “ பெரிய திருமொழி “ யின் ஐந்தாம் பத்தின் ஆறாம் திருமொழியின் முதல் மற்றும் ஏழாம் பாசுரங்கள்.

ஸ்ரீ.நம்பெருமாள் குதிரை வாஹனத்தில் , சந்தன மண்டபத்திலிருந்து எழுந்தருளி, மணல்வெளியில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு முன்பாக ஸ்ரீ.நம்மாழ்வாரும், ஸ்ரீ.எம்பெருமானாரும் எழுந்தருளியிருந்தனர். பெருமாள் மணல்வெளி வந்த பிறகு ஒய்யாளி ஸேவை . மணல் வெளி முழுவதும் இரண்டு முறை ஒய்யாளி . ஒரு முறை சாதாரண ஒய்யாளி. அடுத்த முறை கோண ஒய்யாளி. இந்தக் கோண ஒய்யாளி மிகவும் அற்புதமாக இருந்தது. பெருமாள் குதிரை வாஹனத்தில் நான்கு புறமும் திரும்பித் திரும்பி அங்கு கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான பத்தர்களுக்கு ஸேவை ஸாதித்தார்.

இன்றும் அடியேனுக்கும் ஒரு பாக்கியம் கிடைக்கப்பெற்றது. பொதுவான பத்தர்கள் எல்லோரும் கம்பிகளுக்குப் பின்னால் இருக்க வைக்கப்பட்டனர். அடியேன் மூத்த மைத்துனரும், ஸ்ரீ.ரங்கநாயகித் தாயார் ஸன்னதி பண்டாரியுமானவர் அடியேனை ஒய்யாளி நடக்கும் மணல் வெளியின் உள்பகுதியில் அழைத்துச் சென்றார். இதன் மூலம் பெருமாளை மிக அருகில் ஸேவிக்கும் பாக்கியமும், புகைப்படங்கள் எடுக்கும் பாக்கியமும் கிடைக்கபெற்றேன்.
பின்னர் உபயதாரர்கள் மரியாதை ஆனது. அதற்குப் பின்னர் ஸ்ரீ.திருமங்கை ஆழ்வாரின் வம்சமான முத்தரையர் வம்சத்து சிறுவர்கள் பலர் கையில் ஒரு தடியை பிடித்துக் கொண்டு, ஓங்காரமிட்டுக் கொண்டு, ஸ்ரீ.நம்பெருமாளை ப்ரதக்ஷிணம் செய்து மணல் வெளி முழுவதும் பல முறை வலம் வந்தனர். இவர்களுக்குப் பிறகு முத்தரையர் குல இளைஞர்களும், முதியவர்களும் பெருமாள் மரியாதையுடன் ஸ்ரீ.நம்பெருமாளிடம் வந்து, அவரை ப்ரதக்ஷிணம் செய்து ஸ்ரீ.திருமங்கை ஆழ்வாரிடம் சென்றனர்.
முதலில் திருமங்கை ஆழ்வார் தன் அரச குல தோற்றத்துடன் ஸ்ரீ,நம்பெருமாளை ப்ரதக்ஷணம் செய்து, அடுத்த முறை ஸ்ரீ.நம்பெருமாளிடம் இருந்த பொருள்களை களவாடி, அவற்றை பெட்டிகளில் நிறப்பிக் கொண்டு , அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.  அடுத்த முறை ஸ்ரீ.நம்பெருமாள் அருள் கடாக்ஷம் கிடைக்கப் பெற்று , ஸ்ரீ.திருமங்கை ஆழ்வாராக  ஸ்ரீ.நம்பெருமாளிடம் எழுந்தருளினார். அவருக்கு, பரிவட்டம் கட்டப்பட்டு , மாலைகள் சாற்றப்பட்டு , ஸ்ரீ.சடகோபன் ஸாதிக்கப்பட்டது.
அதற்குப் பிறகு ஸ்ரீ.நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபம் எழுந்தருள, அவரைத் தொடர்ந்து ஸ்ரீ.நம்மாழ்வார், ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார், ஸ்ரீ.எம்பெருமானார் மூவரும் ஆயிரங்கால் மண்டபம் எழுந்தருளினர்

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *