Bhoopathy thirunal Srirangam day 6

Thanks to Sri Raghavan Nemili

ஸ்ரீ.நம்பெருமாள் , பூபதித் திருநாள் ப்ரம்மோற்சவத்தின் ஆறாம் நாள் ( 27.01.2018 ). காலை சுக்ரவாரதோப்பு ஆஸ்தான மண்டபம் ( கீழ வாசல் ) எழுந்தருளினார்.

மாலை அங்கிருந்து புறப்பாடு கண்டருளி யானை வாஹன மண்டபத்திற்கு எழுந்தருளினார். ஸ்ரீ.நம்பெருமாளின் திவ்ய தரிசனம் மிக அற்புதமாக எல்லோருக்கும் ஸேவையானது. பெருமளவில் பத்தர்கள் கூட்டமிருந்தாலும், பெருமாள் எழுந்தருளியிருந்த மண்டபத்தின் பகுதி விசாலமாக இருந்ததால் தள்ளுமுள்ளு இல்லாமல் பலராலும் மிக நிதானமாக ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றது.

பின்னர் இரவு 8.00 மணிக்கும் ஸ்ரீ.நம்பெருமாள் யானை வாஹனத்தில் புறப்பாடு கண்டருளி , உத்தர வீதிகள் வழியாக எழுந்தருளி மீண்டும் யானை வாஹன மண்டபம் வந்து, இரவு உள் ஆண்டாள் ஸன்னதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ.ஆண்டாள் நாச்சியாருடன் மாலை மாற்றல் நடைபெற்றது.

இரண்டு நிகழ்ச்சிகளிலும் எடுத்த புகைப்படங்களை அடியேன் பதிவுசெய்துள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *