Sri Namperumal masi theppotsavam day 8

தெப்பத் தி்ருநாள் – ஸ்ரீ.நம்பெருமாள் மாசி தெப்ப உற்சவம் , எட்டாம் நாள் ( 25.02.2018 ) –

இரவு 7.30 மணிக்கு தெப்பக் குளம் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பாடு கண்டருளி, தெப்பக்குளத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினார்.

மூன்று முறை தெப்பத்தில், தெப்பக் குளம் வந்து , பின்னர் தெப்பக் குளத்தில் உள்ள மைய மண்டபம் சேர்ந்தார். இரவு சுமார் 9.30 மணியளவில் அங்கிருந்து புறப்பாடு கண்டருளி திருக்கோயில் ஆஸ்தானம் எழுந்தருளினார்.

தெப்பக் குளத்தில் ஒரு முறை வலம் வருவதற்கு சுமார் முப்பது நிமிடங்களுக்கும் மேலானது. அடியேன் ஸேவித்த குளங்க்ளிலேயே இத் திருக்குளம் மிக நீண்டதாயும், அகலமாகவும் இருந்தது.

தெப்பக் குளத்திற்கு பல வழிகளில் இருந்து பத்தர்கள் கூட்டம் வரும் வழி இருந்தாலும், அடியோங்கள் வசிக்கும் அகம் உள்ள வீதி வழியாக ஆயிரக் கணக்கில் பத்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

பொதுவாகவே ஒவ்வொரு உற்சவத்தின் போதுமே ஏராளமான அளவில் பத்தர்கள் திரண்டிருந்தாலும், கருட ஸேவை, யானை வாஹன ஸேவை, திருத்தேர் போன்ற உற்சவங்க்ளில் வீதிகள் முழுக்க பத்தர்கள் திரளுகின்றனர். அதுவும் தெப்பக் குளம் மிக பெரிய அளவில் இருப்பதால் , நான்கு பக்கமும் திரண்டிருந்த பத்தர்கள் கூட்டத்தைக் காணும் பொழுது, அங்கிருந்த அடியேனுக்கு ஸ்ரீ.குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த ” பெருமாள் திருமொழி ” யில் இரண்டாம் திருமொழியில் எப்படி எல்லாம் அரங்கனின் பத்தர்கள் கூட்டத்தைப் பற்றி எழுதி இன்புற்றார் என்பதை நினைத்துப் பார்த்து இன்பம் அடைந்தேன்.

அத் திருமொழியின் இரண்டாம் திருமொழியில், நான்காம் பாசுரம் பற்றி குறிப்பிடுகின்றேன் :-

” தோய்த்த தண் தயிர் வெண்ணை பால் உடன் உண்டலும் * உடன்றாய்ச்சி கண்டு *
ஆர்த்த தோளுடை எம்பிரான் * என் அரங்கனுக்கு அடியார்களாய் *
நாத்தழும்பெழ நாரணா என்றழைத்து *
மெய் தழும்பத் தொழுது *
ஏத்தி * இன்புறும் தொண்டர் சேவடி * ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே * ”

PS – Adien have takenfew photos and thanks to Sri.Balaji Vijay/

Thanks to Sri Raghavan Nemili

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *