Srirangam viruppan thirunal day 7 Evening

Thanks to Sri Raghavan Nemili Vijayaragavachari

ஸ்ரீ.நம்பெருமாள் , விருப்பன் திருநாள் -சித்திரை உற்சவம் – ஏழாம் நாள் , மாலை திருச்சிவிகையில் புறப்பாடு கண்டருளினார். ஏழாம் திருநாளான இன்று காலை வீதி புறப்பாடு கிடையாது. ஆனால் பத்தர்கள் அனைவரும் அருமையாக ஸேவிக்கும் வண்ணம் காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை சந்தனு மண்டபத்தில் உள்ள கண்ணாடி அறையில் ஏகாந்தமாக ஸேவை ஸாதித்துக் கொண்டிருந்தார். மாலை 6.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து உபயநாச்சிமார்களுடன் புறப்பாடு கண்டருளி, நெல் அளவை அளக்க வைத்து, பின்னர் சித்திரை வீதிகளில் திருச்சிவிகையில் புறப்பாடு கண்டருளினார். நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமை அன்று , உலக அளவில் ஒரு உற்சவத்திற்கு பெரும்ளவு கூட்டம் கூடும் சித்திரை தேருக்காக , சித்திரை வீதிகளில் உள்ள மின்சார கம்பிகளை அகற்றிக் கொண்டிருக்கும் பொருட்டு, சித்திரை வீதிகள் முழுதும் இருட்டில் இருந்தன. அந்த இருட்டிலும் ஸ்ரீ.நம்பெருமாள் தெருவெந்ங்கும் கூடியிருந்த ஆயிரக் கணக்கான பத்தர்களுக்க்கு ஸேவை ஸாதித்த வண்ணம் எழுந்தருளிக் கொண்டிருந்தார். சரியான வெளிச்சம் இல்லாத காரணத்தால் அடியேன் எடுத்த புகைப்படங்களும் சரியாக , தெளிவாக மின்னவில்லை. இருந்தாலும் உலகெங்கிலும் உள்ள ஸ்ரீவைஷ்ணவர்களும், நம்பெருமாளிடம் அதீத பத்தி கொண்ட அன்பர்களும் கண்டு களிக்க அடியேன் எடுத்த புகைப்படங்க்ளை பதிவிடுகின்றேன். நாளை காலை 6.00 மணிக்கு வெள்ளி குதிரை வாஹனத்திலும், நாளை மாலை 6.30 மணிக்கு தங்க குதிரை வாஹனத்திலும் ஸ்ரீ.நம்பெருமாள் புறப்ப்ாடு கண்டருளுவார். மாலை தங்க குதிரை வாஹன புறப்பாட்டில் கிழக்கு சித்திரை வீதியில் ஒய்யாளி கண்டருள இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *