Mannargudi Sri Rajagopalan Aadi 18 Thanga pallaku purapadu in Nayakar Thirukolam. Theerthavari at Cauvery. Night Malai Matral in Sengamala Thayar Sannithi.

Thanks to Sri Mannarkudi Uppili Srinivasan

ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோவில் இராஜமன்னார்குடி. ஆடி 18 ஆம் பெருக்கு காலை தீர்த்தவாரி இரவு திருக்கோயிலில் மாலை மாற்றுதல் தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு

காலையில் கைலாசநாதர் படித்துறையில் தீர்த்தவாரி, சாயந்திரம் திருப்பாற்கடல் லெக்ஷ்மி நாராயணன் சந்நிதியில் திருவடி திருமஞ்சனமாகி நம் கோபாலன், மன்னையில் கடந்த ஒன்றறை மணி நேரமாக மழையைப் பொழிந்து கொண்டு இருக்கிறான்!!…தானும் குளிர்ந்து, தமரையும் குளிர்வித்துக்கொண்டிருக்கிறான்!!…செங்கமலத்தாயார் மாலை மாற்ற தயாராகக் காத்திருக்கிறாள்!!….
கோபாலனோ காவிரியை விட்டு அகல்வதாக இல்லை!.. இரவு 8.30 க்கு மேல் அவனே மனமுவந்து வருணனை இளைப்பாற்றி, கோபுர வாசல் நுழைந்து, திருமுற்றவெளி அடைந்து, தாயார் சந்நிதிக்கெதிரே நிற்கும் போது திருமுற்றவெளி தொடங்கி ஸ்ரீநம்மாழ்வார் சந்நிதி வரை மழை தீர்த்தம் ஓடாமல் ஒரு தடாகம் போல் காட்சி!!…குளுகுளுவென மயக்கும் மாலை மாற்றி ஆஸ்தானம் அடைந்தான்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *